சென்னை மாவட்டம்:-
நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் காவல் துறையும் அதன் அத்தியாவசியத்தையும் பொறுத்தும் மக்களின் துயர்துடைத்திடவும்.
புதிதாக காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு.
தமிழக காவல் துறையில் சென்னை ஆவடி,தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிதாக காவல் ஆணையரின் பிரத்யேக அலுவலகத்தை காணொலி காட்சிகள் மூலமாக திறந்து வைத்தார்.
குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 20 காவல்நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையம் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரம் காவல் ஆணையராக திரு.ரவி இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது சக காவல் துறை அதிகாரிகள் பெரும்பாலோர் பங்கேற்று ஆணையர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் அதற்கு முன்பு காவலர் மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்பு இருக்கையில் அமர்ந்தவுடன் வயர்லெஸ் மைக்கில் அனைவருக்கும் புத்தாண்டை தெரிவித்தும் பணிகளை சிறப்புற மேற்கொள்ள சில வார்தைகளை கூறினார்.
செய்தி உதவி:-
S.ரெங்கசாமி செய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்.
