சிறார்களின் நல்வாழ்விற்காக திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்திய காவல் கண்காணிப்பாளர்.
திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S,. அவர்கள் அறிவுரையின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் 14.03.2020 திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்தினார்.SJHR காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் உடன் இருந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டத்திற்கு முரணான சிறார்கள் மற்றும் முன் தண்டனை பெற்ற சிறார்கள் அவர்களின் மறுவாழ்விற்க்காக திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு முகாம் அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் SBI வங்கியின் RSETI
(ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்) அமைப்பு இணைந்து நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே SBI வங்கியின் RSETI என்ற இலவச சிறப்பு தொழிற்பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் தங்குமிடம்,உணவு இலவசமாக அளித்து விவசாயம் சார்ந்த, உற்பத்தி சார்ந்த, சேவை சார்ந்த பயிற்சிகளை அளித்து சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த முகாமில் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.