

தமிழக காவல் துறைக்கு பேரறிஞர் அண்ணா பதக்கங்கள் மதுரை காவல் ஆய்வாளர்கள் தேர்வு
ஒவ்வொரு ஆண்டும்
செப்டம்பர் 15 ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வழங்ப்பட்டு வருகின்றன.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தமிழ் நாட்டில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சிறைத்துறை ஊர் காவல் படை தமிழ்நாடு விரல் ரேகை பிரிவு அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டில் 100 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக மதுரை மாநகர் தெற்கு துணை காவல் ஆணையர் சீனிவாசப்பெருமாள் தெற்கு போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கனேஷ்ராம் மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி மற்றும் தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் ரமேஷ்குமார் திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டு பதக்கம் மற்றும் நன்கொடையும் வழங்ப்படவுள்ளது.
