பொங்கல் விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை, இந்த மாதம் முழுவதும் கரும்பு சாப்பிடுங்க
பொங்கல் அன்று மட்டுமல்லாது இந்த மாதம் முழுவதும் கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என ஆவடியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சிப்படை இரண்டாம் அணி வளாகத்தில் சிறப்பு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது
விழாவில் காவலர்கள் மற்றும் அவர்காளின் குடும்பத்தினர்கள் பங்கேற்று உற்சாகமாக பொங்கல் வைத்து கோலப்போட்டி உரியடித்தல் கயிறு கட்டி இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர்
சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு பங்கேற்று வளாகாத்தில் செடி ஒன்றை நட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொங்ல் வாழ்த்து கூறி அவர் பேசுகையில் பொங்கல் என்பது நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் விழாவாகும் விவசாயிகள் நிறைய கரும்புகள் உற்பத்தி செய்துள்ளனர். அதனால் இன்றைக்கு மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதும் அனைவரும் கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என்றார்.
