போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 6 நபர்கள் நொளம்பூர் பகுதியில் கைது.
சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி வ/31, என்பவரிடம் காலி மனை வாங்கித் தருவதாக கூறி, அதேபகுதியை சேர்ந்த ராஜம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து விற்க முயன்ற வழக்கில், கடந்த 01.10.2020 அன்று V-7 நொளம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1).புருஷோத்தமன்(60), 2). ராஜேஷ்(37),3). சுவாமி நாதன்(51), 4). திலகா(54), 5). ஹேமலதா(45) மற்றும் 6).பிரபாமாகாளி(51) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.