Police Department News

மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

மதுரையில் கேமரா சர்வீஸ் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர் கேமரா சர்வீஸ் சென்டரை மதுரை நேதாஜி ரோடு பகுதியில் நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கரும்புகை வெளியேறியது உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திரு வெங்கடேசன் அவர்களின் தலைமையில் தீயணைப்பு போலீசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் கேமரா சர்வீஸ் சென்டரில் விலை உயர்ந்த கேமரா மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்ச ரூபாய் மதிப்பிலான கேமரா மற்றும் உபகரணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது கடையில் உள்ள மின் சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது இது குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.