பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று கிராமங்களுக்கு சென்று விசாரணை செய்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கொடைக்கானல் உட்கோட்ட காவல்துறையினர் .
08.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜா ஆகியோர் பண்ணைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் மனுக்களை நேரடியாக பெற்றனர். இதுகுறித்து விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.
மேலும் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் முகக்கவசம் அணியும் படியும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
