காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை.
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிக்கு வந்த கலாவதிக்கு காவல் நிலையத்திலேயே திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலாவதிக்கு தர்ஷினி என்ற பெண் குழந்தையும், செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். பணியின்போது இறந்ததால் உடல்நல குறைவு காரணமாக இறந்தாரா அல்லது காவல் நிலையத்தில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டு அதனால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
