தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., – கான்ஸ்டபிள் வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் இருக்கின்றனர். இதற்கிடையில் மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் விடுமுறை மறுப்பு என்று பல காரணங்களால் காவல்துறையினருக்கு எளிதில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர்.10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மாரடைப்பு காரணமாக 9 பேர், விபத்தில் சிக்கி 12 பேர், நீண்ட நாள் உடல் நலக்குறைவால் 23 பேர் உயிரிழந்தனர். கடந்த 2020ல் 337 காவல்துறையினர் இறந்தனர். 2021-ல் உயிரிழப்பு 414 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.