போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா
மதுரை நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: குருவிக்காரன் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று, வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.
அழகர்கோவில், புதுார், மாட்டுத்தாவணி, மேலுார் ரோட்டில் இருந்து அவனியாபுரம், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் வழி குருவிக்காரன் பாலத்தில் வந்து காமராஜர் சாலை சந்திப்பு, தெப்பக்குளம் வழி நகருக்குள் செல்லலாம். பாலப்பகுதிசர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி விரகனுார் பைபாஸ் ரோட்டுக்குவிரைவில் செல்லலாம்
மேலுார், மட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வழி மதுரை நகர், விமான நிலையம், தெப்பக்குளம் செல்லும் வாகனங்கள் கே.கே.நகர்.ஆர்ச், 80 அடி ரோடு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை, குருவிக்காரன் சாலை வழி செல்லலாம்.இப்புதிய பாலத்தை பயன்படுத்துவதால் பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெற்குவாசல், கீழவாசல், நெல் பேட்டை, முனிச்சாலை பகுதிகளில் நெரிசல் குறையும்.தங்கள் நேர விரயம், வாகன எரிபொருள் செலவையும் தவிர்க்கலாம், என்றார்.