
பாலக்கோடு அருகே பெற்றோர் கண்டித்ததால் +1 பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தார அல்லி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி இவர் TNSTC-ல் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் காவியா (17) பாலக்கோடு தனியார் பள்ளியில் பிளஸ் +1 படித்து வருகிறார்.
இவர் அதிகளவு செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் இதற்கு
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டிததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் காதலால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
