
மதுரையில் சிறுமி பாலியல் பலாத்காரம் ஆட்டோ ஓட்டுனர் கைது மதுரை தல்லாகுளம் மகளீர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 19). ஷேர் ஆட்டோ டிரைவர். கதிரேசன் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
இது அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் செல்லூருக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் கதிரேசன் சிறுமியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கதிரேசன் அந்த சிறுமியை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் புதர் பகுதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆட்டோ டிரைவர் கதிரேசனை கைது செய்தனர்
