Police Recruitment

மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை

மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை மேலப்பொன்னகரம், பாரதியார் தெரு சண்முகம் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் c(வயது 40). உத்தரபிரரேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சுமதி (வயது 32). இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்தவர். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், வர்ஷா (13) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 8-ந் தேதி மதியம் ஈஸ்வரன் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த மனைவியையும், மகள் வர்ஷாவையும் காணவில்லை.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மனைவியின் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஈஸ்வரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், என் மனைவியையும், மகள் வர்ஷாவையும், எனது அண்ணன் ஹரி ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துக் கொண்டு போய் மறைத்து வைத்துள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.