தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா
25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
காளைகள் துள்ளிக் குதித்து ஓடியதில் 100- க்கும் மேற்பட்டோர் லேசான காயம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் தளபதி மு க ஸ்டாலின் பிறந்த நாளை அடுத்து எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் திரு பிஎன்பி இன்பசேகரன் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைத்தார் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் திரு வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கி விழாவினை சிறப்பாக நடத்தினார்.
இன்று தொடங்கிய எருதுவிடும் விழாவில்
பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 750 க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று ஓடுபாதையில் சீறிப் பாய்ந்து ஓடின. இதில் சிறப்பாக ஓடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
எருது விடும் விழாவை கண்டுகளிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
காளைகள் சீறிப்பாய்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் ஒத்துழைப்பின் மூலம் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது, இதனை பொதுமக்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்* .