விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும்.
காரியாபட்டி அருகே கல்லுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும், பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பிசிண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணா துரை அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும்.
மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும்.
அதன் காரணமாக அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் ஆகையால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும்.
செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் சமீபகாலமாக செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.
நாள்தோறும் பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் போக்குவரத்து விதிமுறைகளையும் தலைக்கவசத்தின் அவசியத்தையும் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுவிப்பது என்ற வழிமுறைகளையும், போக்சோ சட்டம் யார் மீது பாயும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும்
பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருதல் ஜாதி அடையாளங்களான பனியன்கள் கை பட்டைகள் தவிர்ப்பது குறித்தும் அவர் அறிவுரை கூறினார்.
இதில் குழந்தை நல சிறப்பு அலுவலர் தலைமை காவலர் பார்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.