


மதுரை வில்லாபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து.
மதுரை போக்குவரத்து நகர் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அவர்களின் மனைவி தனமாலினி (வயது 43) இருவரும் இன்று காலை தங்களது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வில்லாபுரம் வெற்றி தியேட்டர் அருகில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரம் தனமாலினி மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து உதவி காவல் ஆணையாளர் திரு. திருமலை அவர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கப்பாண்டி அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
