Police Department News

ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி!

ஆபரேஷன் 2.0.. கஞ்சா வழக்கில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: போலிஸ் அதிரடி!

தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆபரேஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்தினார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையல், தென்மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. தென்மண்டலத்திலுள்ள 10 மாவட்டங்களில், 4 சரக காவல்துறை துணைத்தலைவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தீவிர முயற்சிகளால் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை முறைப்படி முடக்கம் செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 90 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.