தொழில் போட்டியால் பஞ்சர் கடை உரிமையாளர் கொலை.விரைந்து கொலையாளியை கண்டுபிடித்த போலிசாருக்கு எஸ்.பி.,பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47). இவருக்கு திருமணமாகி சங்கரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை அவரது கடையில் ரத்த வெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆனந்தராஜன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், தொழில் காரணமாக இவரது கடைக்கு எதிர்புறத்தில் பஞ்சர் கடை நடத்தி வந்த பாளை ரோடு 3வது மைல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் செல்லகுட்டி என்ற குட்டி (27) என்பவர் கருப்பசாமியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பசாமி பஞ்சர் பார்ப்பதற்கு குறைவான பணம் வாங்கியதால், தனக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரை கொலை செய்ததாக செல்லகுட்டி வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்த போலீசாரை தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டினார்.