Police Department News

மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேலான உத்தரவுபடி மேலூர் DSP அவர்களின் SPL Team மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் போலீசார் நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில் மதுரை அருகே நாயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் ரவிச்சந்திரன் வயது 54, இவர் கோட்டநத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 13 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த போது மேற்படி போலீசார் எதிரியை பிடித்து 13 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.