




திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
27.06.2022 திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே மாவட்ட காவல்துறை சார்பாக நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர் உட்கோட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தில் பணிபுரியும் பணியாளரை பாராட்டியும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கி, காவலர்களின் குடும்பத்தார்களிடம்
காவலர் குடியிருப்புகளின் நிறை, குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்கள், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் கபிலன், இ.கா.ப., அவர்கள், நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நகர் உட்கோட்ட காவல் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் .
