
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.7,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
14.07.2022 திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கடந்த 1997 ம் ஆண்டு ராஜேந்திரகுமார் என்பவர் அளித்த நில மோசடி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த பாலகோபால் (60) மற்றும் தங்கச்சன் (76) ஆகிய இரண்டு நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.வினோதா அவர்கள், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.அமுதா அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 14.07.2022 ம்தேதி திண்டுக்கல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி.மோகனா அவர்கள் குற்றவாளிகள் பாலகோபால் மற்றும் தங்கச்சன் ஆகியோருக்கு தலா 14 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.7,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
