Police Department News

அருப்புக்கோட்டை
எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை.

விருதுநகர் மாவட்டம்:-

அருப்புக்கோட்டை
எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவில்
பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடி தூவி நகை பணம் கொள்ளை.

தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் ஓய்வு பெற்ற ஆசிரியரான சங்கரபாண்டியன் தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணி என்பவருடன் வசித்து வருகிறார்.

இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணியை அவரது உறவினர்களை அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் 18.7.2022 இன்று வழக்கம் போல் பிற்பகலில் அவரது உறவினர்கள் சங்கரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில் சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜோதிமணி இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது தெரியவந்தது.

மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியும் தூவப்பட்டு கிடந்தது.

இதனையடுத்து விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் தம்பதியரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகர்க் அவர்கள் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.

மர்ம நபர்கள் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் எவ்வளவு பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி உதவி:-
S.ரெங்கசாமி

Leave a Reply

Your email address will not be published.