மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் செயல்படாத கல்குவாரியில் மூழ்கி 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!!
மதுரைஅருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செயல் படாத கல்குவாரிக்கு குளிக்கசென்ற. செக்கனூரனியை சேர்ந்த
கிஷோர் வயது 32/2022
மற்றும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த, சிறுவன், சிவராமன் வயது13/2022, ஆகிய
இருவரும் காலையில் குளிக்கசென்றுள்ளனர்.
இச்சிறுவன் சிவராமன் பள்ளத்தில்
மூழ்கிய நிலையில், அவரை காப்பற்ற சென்ற கிஷோரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொது மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு & மீட்புபணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு போக்குவாரத்து நிலைய அலுவலர் திரு. சேகர்அவர்கள் தலைமையில் 6 பேர்கொண்ட குழுவினர் வந்து தீயணைப்பு துறையினர். இதில் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வீரர், திரு.M.ராமர் என்பவர் சுமார் 4 நிமிடம் தண்ணீரில் மூழ்கி மூச்சு அடைக்கி சடலமாக மீக்கபட்டு இருவரையும்.மதுரை அரசு ராஜாஜீ மருத்துவனை அனுப்பபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற செயல் படாத கல் குவாரிகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனிமேல் சிறுவர்களை பெற்றோர்களும் கவனமாக இருக்க
வேண்டும்.
இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இது போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்லுவது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.,இதுபோல்பல சிறுவர்கள் பரிதாபமாக இறந்து உள்ளனர்.
எனவே, இனியும் இது போல் நடக்காத வகையில், இது போல்செயல் இழந்து, கிடக்கும் கல்குவாரிகளில் தேங்கியிருக்கும். நீரில் சிறுவர்கள் குளிக்க அனுமதிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தீயணைப்பு வீரர், திரு. ராமரை அங்கியிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.