
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் 29/01/2023 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் திரு ஸ்டீபன் செப்பசுதன் மற்றும் பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு இமைய வர்ணம் அவர்கள் தலைமையில் கஞ்சா அற்ற ஊராட்சியாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கஞ்சா பற்றிய விழிப்புணர்வையும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாங்கரை ஊராட்சி மக்களுக்கு எடுத்துரைத்தார் அதன் பிறகு பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் திரு இமயவர்மன் அவர்கள் கஞ்சா பழக்கம் அற்ற ஊராட்சி என்ற தலைப்பில் உறுதிமொழிகளை வாசிக்க அதனை மாங்கரை ஊராட்சி ஊர் மக்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது பிறகு தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் திரு ஸ்டீபன் ஜெபசுதன் அவர்களால் கஞ்சா அற்ற ஊராட்சி மாங்கரை என்ற பதாகை மாங்கரை ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் அவரது திருக்கரங்களால் வைக்கப்பட்டது
