Police Department News

மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.21ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மணி காவல் ஆய்வாளர் திருமதி R.பொன்மீனாள் மற்றும் 2 சார்பு ஆய்வாளர்கள் 8 காவல் ஆளினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில்
பதிவான தொலைந்து போன மொபைல் போன் புகார்களில் கடந்த ஒரு மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக ரூபாய் 4,67,000/- மதிப்புள்ள 51 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவப்பிரசாத் IPS அவர்களால் 16/07/22 அன்று உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,08,63,850/ மதிப்புள்ள 777 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டன.

மேலும் வங்கிகளிடமிருந்து பேசுவதாக கூறி பொது மக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளரின் துரிதமான நடவடிக்கையினால் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,60,730/- மற்றும் இதுவரை ரூ. 28,025,730/- உரியவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வாக இருக்கவும் வங்கி கணக்கு எண். CVV மற்றும் OTP போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்.என்றும் மற்றும் குறைந்த மேலும் பணம் இரட்டிப்பு வாக்குறிதியளிக்கும் Investmend App களை நம்பியும் ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறிதியை நம்பியும் முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மேலும் குறைந்த அசலுக்கு கூடுதலான வட்டி பெறும் ஆன்லைன் ஆப்களில் பணம் பெற்று ஏமாற வேண்டாமென்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால்களை அட்டன் செய்ய வேண்டாம் வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் remote access appகளான any desk deam viewer போன்ற செயலிகளை பதிவிரக்கம் செய்ய வேண்டாம் என்றும் யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும் https/www.cypercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published.