







19.07.2022 இன்று
J2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் ( சட்டம் ஒழுங்கு)தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்” மரங்கள் நடும்விழா” நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS பாராட்டு பெற்ற சமூக ஆர்வலர் 10 வருடங்களாக காவலர்களுடன் இணைந்து சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட்ட அடையாறு, பெசண்ட் நகர், பாலவாக்கம், சோழிங்கநல்லூர், நந்தனம்,கோட்டூர்புரம், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை,ஆகிய இடங்களில் மரங்கள் நட்டு சாதனை படைத்து வரும் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று,நாம் சுவாசிக்க Oxygen தேவை , காற்றை கொடுக்கும் மரங்களை அழித்து நாம் சுவாசத்தை சுவாசிக்க முடியாமல் உயிர் பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக சேவையை தியாகமாகவும் பொதுமக்கள் மீது அக்கறை உள்ள காவல்துறையினர் தற்போது சமூக ஆர்வலரைகொண்டு பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.அதனடிபடையில் J2. அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் சார்பில் மரங்கள் நடுவிழா நடைபெற்றது. பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் மரங்கள் நடப்பட்டது . மரங்கள் நடுவதில் பங்கு பெற்ற காவல்துறையினர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆயாவாளர் திரு.செல்வமணி (சட்டம் மற்றும் ஒழுங்கு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆயாவாளர் திரு.நேரு மற்றும் சமூக சேவகர்கள் திரு.விக்னேஷ் மற்றும் திரு.முகேஷ் .
