

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கொடைக்கானல் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் மன்னவனூர் கைகாட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1). வைரவேல் (30), த.பெ. கருத்தப்பாண்டி, மன்னவனூர், 2). லட்சுமணன்(38), த.பெ. செல் வம், மன்னவனூர், 3). மதன்குமார் (24), த.பெ. கனி, மன்னவனூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோ அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1). சத்தியராஜ் (30), த.பெ. நாகராஜன், எம்.ஜி.ஆர். காலனி, பூண்டி, கொடைக்கானல், 2). குணசேகரன் (52), த.பெ. மாரிமுத்து, கருப்பணசாமி கோவில் தெரு, மன்னவனூர், கொடைக்கானல், 3) சேட்டன் என்ற சரத்குமார் (60), த.பெ. தங்கப்பன், மன்னவனூர், கொடைக்கானல் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோ அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட 6 நபர்களின் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
