


மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல்
மதுரை 18.7.2022 தேதி
தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் மானியம் விலையில் ரேஷன் பொருட்கள் மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் பகுதியில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு வழங்குவதற்காக டேங்கர் லாரிகள் மூலம் மண்ணெண்ணை அனுப்புவதற்காக நான்கு மையங்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்ட விரோதமாக மண்ணெண்ணை லாரி ஒன்று வெகு நேரம் நிற்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க உடனே, விரைந்து வந்த அலங்காநல்லூர் சிவன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியை பிடித்து விசாரணை செய்ததில்.
மண்ணெண்ணை லாரியில் இருந்து, சட்ட விரோதமாக மண்ணெண்ணெயை கடத்தி அதில் இருந்து 3 பேரல்களில் சுமார் 600 லிட்டர் நிரப்பி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மானிய விலை மண்ணெண்ணெயை கடத்திய இருவரையும், மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த, பழனிக்குமார் 38/2022 மற்றும் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த
லாரிஒட்டுநர் ஜான்சன்
56/2022 ஆகியோரை
தமிழக அரசு குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 3 பேரல்களில் சுமார் 200 லிட்டர் வீதம் கடத்திய 600 லிட்டர் மண்ணெண்ணை மற்றும்
TN 65 C 2657 டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
