




சன் பிலிம் ஒட்டி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய தெப்பகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர்
கார்களின் உள்ளே இருக்க கூடியவை தெளிவாக தெரியாத வண்ணம் சன் பிலிம் என்று சொல்லக்கூடிய கூலிங் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்களை இயக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது சட்ட விரோதமான பொருட்களை கடத்துவது மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்செயல் புரிவோர்களுக்கு சாதகமாக இருக்கிறது இதனால் இவ்வாறு சன் பிலிம் ஒட்டி வாகனங்களை இயக்க கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு ஏற்கனவே அறிவுருத்தப்பட்டுள்ளது இருப்பினும் இல்வ்வாறு சன் பிலிம் ஒட்டி சட்ட விரோதமாக வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி வருவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதை தடுக்கும் பொருட்டு மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் சன் பிலிம் ஒட்டி வந்த வாகனங்களுக்கு அபாராதம் விதித்து ஒட்டியிருந்த சன் பிலிமை நீக்கி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறை வழங்கி அனுப்பி வைத்தார் மாநகரம் முழுவதும் மொத்தம் 250 கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது..
