
நிர்வாகி ஆளுநரா… முதலமைச்சரா?!
அரசு நிர்வாகத்தைப் பற்றிப் பேசும்போது,
இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 154 இன்படி, ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரங்கள் அனைத்தும், ஆளுநரிடம் மட்டுமே உள்ளன. மற்றபடி,
இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 163 இன்படி, ஆளுநருக்கு அதிகாரமுள்ள விடயங்களைத் தவிர, அவருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், பரிந்துரை செய்யவுமே முதலமைச்சர் உட்பட எந்தவோர் அமைச்சருக்குமே உரிமையுள்ளதே தவிர, தன்னிச்சையாக உத்தரவிடும் அதிகாரம் எதுவுமே கிடையாது.
இந்திய அரசியல் சாசன கோட்பாடு 163(3) இல், ஆளுநரிடம் நீதிபதிகள் உட்பட யாருமே அமைச்சர்கள் யாரும் ஆலோசனை வழங்கினரா? என கேட்கக்கூடாதுன்னு தடை விதிக்கப்பட்டிருக்கு.
