மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது
மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் திருட்டை கட்டுப்படுத்த மதுரை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காலையில் மதுரை செல்லூர் பகுதியில் சிலர்
பட்டாக்கத்தியுடன்
ரகளையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் நேரில்சென்றனர்.
அங்கு ரகளையில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சிறுவனின் செல்போனில் விலை உயர்ந்த பைக்குகளுடன் புகைப்படம் எடுத்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து புகைப்படத்தில், இருந்த வண்டி எண்களை ஆய்வு செய்தில், அவை அனைத்தும் திருட்டு வண்டி என்பது தெரிய வந்தது. கூடுதல் விசாரணையில் அச்சிறுவனுடன் தொடர்புடைய நண்பர்கள் 5 பேர் என மொத்தம் ஆறு பேரை செல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீசார் 6 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற் கட்ட விசாரணையில் , போதைப்பக்கத்திற்கு அடிமையானதால், இந்த திருட்டு தொழிலை தொடர்ந்ததாக கூறினர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் இருசக்கரவாகனம் (பைக்) திருட்டுசம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுவரை 8 பைக் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,
அதே போன்று 9 ,விலை உயர்ந்த பைகுகளை திருடி விற்பனை செய்துள்ளதாககவும் தெரிவித்தனர்
திருடிவிற்பனைசெய்துஅதில்கிடைக்கும்பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கு, ஊர் ஊராக சென்று உல்லாசமாக சுற்றுலா சென்று வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது
இது சம்பந்தமாக தொடர்ந்து, சிறுவர்கள்
ஒன்பது இரு சக்கர வாகனங்களையும், ஐந்து விலை உயர்ந்த செல்போன்களையும் மீட்ட,
மதுரை மாநகர்காவல் துறையினர் சிறுவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்கள் என்பதால் கூர்நோக்கு பள்ளியில், அடைத்தனர்.