
மதுரை ஆவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் 2 பேர் கைது கார் பறிமுதல்
அவனியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் உதவி ஆணையர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சந்திரன் உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர்களின் தலைமையில் போலிசார் சோதனையில் ஈடுபட்டனர்
அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமளிகும் வகையில் ஒரு கார் வந்து நிற்கவே அதனை போலிசார் சோதனையிட்டனர் அதில் தடை செய்யப்பட்ட. 124.320 கிலோ புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர்
காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் விற்பனை செய்வதற்காக புகையிலையை கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த 15 ஆயிரத்தையும் தடை செய்யப்பட்ட புகையிலையையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை அய்யர்பங்ளா பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகான் ராஜா வயது 42/22, தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த திருப்பதி மகன் பாலமுருகன் வயது 36/22, ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.
