
ரயில் தண்டவாளம் அருகே கத்தியுடன் அமர்ந்திருந்த வாலிபரை, சி2-சுப்பிரமணியபுரம்போலீசார் கைது செய்தனர்
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் இருக்கக் கூடிய ரயில்வே தண்டவாளப் பகுதியில் கத்தியுடன் ஒரு வாலிபர் அமர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர்க்கு போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சி2 ,சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மேலவாசல் பகுதியை சேர்ந்த கருப்பையா என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்து.
காவல் நிலையத்தில் அழைத்து வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
