
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பணிகளில் சிறந்த நடைமுறைகளை செயலாற்றி வருகின்றது.
அதில் அடுத்ததாக தமிழக காவல்துறையில் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் மிளிரும் வகையில் பேட்ஜ் வடிவமைக்கப்பட்டு அது வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த பேட்ஜ் லோகோ வடிவமைப்பை தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் இ.கா.ப அவர்கள் வடிவமைத்து தயார் செய்துள்ளார்.
மேலும் இதற்க்கென பிரத்யேகமாக ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை கூர்ந்து ஆராய்ந்து,சரியான முறையில் அவற்றில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லோகோவை தமிழ காவல் துறை இயக்குநர் முதல் கடைநிலை காவலர் வரை ஒரே மாதிரியாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
நம் தமிழகத்தில் பின்னளாடைகளுக்கு பெயர் பெற்ற திருப்பூரில் தயாரான இந்த லோகோவை, போலீஸார் சீருடையில் ஒட்டிக்கொள்ளலாம், அல்லது குத்திக் கொள்ளலாம்.
காவல் துறையில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 1,305 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து மற்றும் புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் தமிழக காவல் துறையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 942 காவலர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 23,542 பேர் பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் கூடுதலாக ஒரே வகையான லோகோவை சீருடையில் பயன்படுத்த உள்ளனர்.
புதிய லோகோ வழங்கும் நிகழ்ச்சியை குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு உயர்திரு.வெங்கய்ய நாயுடு அவர்களை அழைத்து தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதற்கான அரசானையும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
சிறந்த கட்டமைப்புடன் என்றும் மக்கள் மத்தியில் மக்களுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றும் காக்கி உடையை மேம்படுத்தவும், உடையனிந்தவர்களை உயர்த்தும் வகையில் இந்த லோகோ அமையவுள்ளது எனலாம்.
செய்தி உதவி
S.ரெங்கசாமி செய்தியாளர்
விருதுநகர் மாவட்டம்.
