
திருச்சி மாவட்டம் திருவெறுப்பூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் இவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் உள்ள பாம்பு நுழைந்துள்ளது.
இதனை பார்த்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நவல்பட்டு முழுவதும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு திருநாவுக்கரசு வீடுகுள் பாம்பை தேடி பார்த்த போது சமையல் கட்டுக்குள் பாம்பு நுழைந்தது தெரியவந்தது.
உடனடியாக அதனை பிடித்து பார்த்த போது அது சாரை பாம்பு என்பது தெரிய வந்தது.சுமார் 6 அடி நீளம் இருக்கும் அப்படி பிடிபட்ட அந்த சாரைப்பாம்பை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்
