





மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 3 நபர்கள் கைது
மதுரை செல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யபடுவதாக செல்லூர் காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது ஆலோசனையின் பேரில் செல்லூர் சார்பு ஆய்வாளர் திரு. ரீகன் தலைமையிலான போலிசார் செல்லூர் ஐயனார் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் போலிசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர் சுதாரித்து கொண்ட போலிசார் மூன்று பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பாண்டி வயது 42/22, அவரது மனைவி சாந்தி 40/22, மற்றும் மேலத்தோப்பை சேர்ந்த போஸ் மனைவி புஷ்பம் வயது 60/22, என தெரிய வந்தது.தொடர்ந்து இவர்களின் வீட்டை சோதனை செய்த போது 23 கிலோ 500 கிராம் கஞ்சா 60 குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது அதனை பறிமுதல் செய்த போலிசார் கணவன் மனைவி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாண்டி ஆந்திராவிலிருந்து கஞ்சாவை மூடை மூடையாக கொள்முதல் செய்துள்ளார் அதனை வீட்டுக்கு கோண்டு வந்து மனைவி உதவியுடன் பொட்டலங்கள் போட்டு மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பியுள்ளார்
குடியிருப்பு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை இதன் காரணமாக அந்த தம்பதியினர். குடிசை தொழில் போல் கஞ்சாவை விற்று வந்துள்ளனர்
இவர்கள் இதன் மூலம் சொத்துக்கள் சேர்த்துள்ளார்களா? அல்லது உறவினர்களிடம் பணத்தை கொடுத்து வைத்துள்ளார்களா? வேறு ஏதாவது தொழிலில் முதலீடு செய்துள்ளார்களா? அல்லது வீடு நிலங்கள் வாங்கியுள்ளார்களா? என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்
