Police Department News

மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம் வெளிநாட்டிலிருந்து பண உதவி வருகிறதா? மதுரை வழக்கறிஞர் DGP யிடம் புகார்

மதுரையில் அரசுக்கு எதிராக போராட்டம் வெளிநாட்டிலிருந்து பண உதவி வருகிறதா? மதுரை வழக்கறிஞர் DGP யிடம் புகார்

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் போலிஸ் டி.ஜி.பி.,யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்

அதில் நாட்டை துண்டாடும் விதத்தில் சில தேச விரோத சக்திகள் செயல்பட்டு வாருகின்றன நாட்டின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அணு உலை அக்னிபாத் உள்பட பல் வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில் வீண் காலதாமதம் ஏற்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த தேச விரோத சக்திகளின் பின்னனியில் தேச விரோத சக்திகள் உள்ளதாக தெரிகிறது. இவர்கள் உடனுக்குடன் பலரையும் திரட்டி ஆர்பாட்டாம் நடத்துகின்றர் இவர்களுக்கு தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் உள்ளது. பொதுமக்களை மூளை சலவை செய்து நாட்டிற்கு எதிராக போராட தூண்டுகின்றனர். இந்த அமைப்புகளுக்கு வெளி நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக பணம் வருகிறது. தேசத்தை துண்டாடும் நோக்கத்தில் இத்தகைய அமைப்புகள் வெளி நாட்டு சக்திகளுடன் கை கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்

எனவே இத்தகைய தேச விரோத சக்திகளின் பின்னனியை ஆராய்ந்து அவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து வரும் பண பரிவர்தனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.,சிறப்பு புலனாய்வு பிரிவு போலிசார் நேரில் ஆஜர் ஆகும்படி வழக்கறிஞர் முத்துகுமாருக்கு சம்மன் அனுப்பினர் அதன்படி அவர் சி.பி.சி.ஐ.டி.,சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலிஸ் டி.எஸ்.பி.,வினோதினி விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர் முத்துகுமார் புகார் மனு தொடர்பான சகல ஆதாரங்களையும் டி.எஸ்.பி.,வினோதினி யிடம் ஒப்படைத்தார் இதன் அடிப்படையில் போலிசார் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.