

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் கிணற்றில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் படுகொலை
மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள M.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, இவர் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20 தேதியிலிருந்து பாலாஜியை காணமல் போய்யுள்ளார். இவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் உறவினர்கள், பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், இந்த நிலையில் கவட்டிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்ற சிலர் சாமிராஜ் என்பவரின் தோட்டத்து கிணற்றுக்குள் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில், சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.
இச்சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு & மீட்பு குழுவினர்
கிணற்றில் உள்ளே தீயணைப்பு வீரர்கள் இறங்கி சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து பேரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியமால் கிடந்த ஆண் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இறந்தவரின் பேண்ட் சட்டையை ஆய்வு செய்த போது.
அதில் ஆதார் கார்டு ஒன்று சிக்கியது. அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காணாமல் போன பாலாஜி என்று தெரிந்து.
பின்னர் இதுகுறித்து பேரையூர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்களில் முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அல்லது வேறு ஏதாவது பிரச்சனைய என்ற கோணத்திலும் பேரையூர் போலீசார் விசாணை மேற் கொண்டு வருகின்றனர்.
