திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தேர்தல் பணி தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தால், அவர்களை ஜனவரி 31 ம் தேதிக்குள் பணி இடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அரசு துறை செயலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம். தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் […]
ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..! ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார். காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஞர் என்பவர் 04.03.2020 தனது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட மணி பர்சை கண்டு அதனை சோதனை செய்ததில் அதில் ரூ 32,500/-மற்றும் அடையாள அட்டை இருப்பதை பார்த்து உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய SI திரு. சரவண போஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த […]
மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, […]