
தடை செய்யப்பட 419 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
மதுரை மாநகரில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக மதுரை மாநகர காவல்துறையால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின்பேரில், துணை ஆணையர் தெற்கு அவர்களின் மேற்பார்வையின்படி, B1-விளக்குத்தூண் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் திரு .மணிமாறன் திரு.ரமேஷ் மற்றும் தலைமை காவலர்கள் சின்னையா கனேசன் சதாசிவம் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நேற்று குற்றத்தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக ரோந்து செய்துகொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் TVS XL இருசக்கர வாகனத்தில் 8 சிறிய வெள்ளை சாக்கு பைகளுடன் நின்றுகொண்டிருந்தவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 419 கிலோ குட்கா (இதன் மதிப்பு சுமார் ரூ.82,000)
குட்கா பொருட்கள் இருந்தது. மேலும் அவர்களிடம் செல்போன்கள் – 3, இருசக்கர வாகனம் – 1, பணம் ரூ.45,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுசம்பந்தமாக B1- விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளான 1. ஜோராராம் 35/22, ஹதாராராம், 2. ஹரிஷ் யாதவ், 26/22, த/பெ. சவாராம், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்
