வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதை குற்றங்கள் குறைய போக்குவரத்து காவலர்களின் கவனத்திற்கு
ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் போய் விடுகிறார். எனவே ஒரு வழிப்பாதை என்ற அறிவிப்பு பலகையை காட்டிலும் பெரியதாகவோ அல்லது வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலோ விளம்பர போர்டுகள் ஒரு வழிப்பாதை போர்ட்டுகளுக்கு பக்கத்தில் வைக்க அனுமதிக்க கூடாது
இதனால் ஒரு வழிப்பாதையில் செல்லும் குற்றங்கள் குறையும் அதையும் மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து அறிவுறைகள் வழங்கலாம்.