
வேலூர் மாவட்டம்
மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமையில் மணல் கடுத்தல் தடுக்க சென்ற தனிப்பிரிவு போலீசார் வாகனம் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்களம் கூட்ரோட்டில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு SP. தனிப்படை மணல் கடத்தல் தடுக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ் வாகனம் எதிரில் வந்த சமையல் எரிவாயு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.
இதில் ராஜா இரத்தினகிரி காவல் நிலையத்தில் S.I ஆக பணி புரிந்து வருகிறார்,காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது
PC .ராஜீவ் காந்தி (29) குடியாத்தம் சேர்ந்தவர் PC .சுரேஷ் அடுக்கம்பாறை சேர்த்தவர். இவர்கள் மூன்று பேரும் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ராஜீவ் காந்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்து உள்ளார்.
இவருக்கு அடுத்த மாதம் 1ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்