Police Department News

மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!!

மதுரை மத்திய சிறையில் பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி போலீசாரை ஏமாற்றி தப்பி ஒட்டம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் என்பவர். கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலலுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் இதன் காரணாமாக அவரை கைது செய்த போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் அவரது 2 கால்களில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனா‌ல் இவரை மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் சிகிச்சை அளிக்க பத்மேஸ்வரனை அழைத்து சென்றனர்.
அப்போது, எதிர் பாராத விதமாக காவல்துறையினரை ஏமாற்றி தப்பி ஓடி விட்டார்

பத்மேஸ்வரன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது . பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் தப்பி ஓடியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பத்மேஸ்வரன் தப்பி ஒடியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.