

மதுரையில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் சென்ற 4100 பேர் மீது வழக்கு
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாமல் சென்றால் அவர்களின் மீது வழக்கு பதிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார் மேலும் தலைகவசம் அணிவதின் மூலம் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் உயிரை காக்க முடியும். எனவே மதுரை மாநகரில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஆறுமுகசாமி அவர்கள் போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் நகரில் கடந்த 2 நாட்களில் தலைகவசம் அணியாமல் செல்பவர்களை போக்கு வரத்து மற்றும் சட்ட ஒழுங்கு குற்றப்பிரிவு போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை மேற்கொண்டு ஆபராதம் விதித்து வருகிறார்கள் அதன்படி நேற்று முன்தினம் நகரில் 2639 வழக்குகளும் நேற்று சுமார் 1500 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன இதன் மூலம் 2 நாட்களில் சுமார் 4139 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் மதுரை கல்லூரி அருகே போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கனேஷ்ராம் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது தலைகவசம் அணியாமல் வந்த ஆண்கள் பெண்கள் ஆகியோரை நிறுத்தி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர் மேலும் அவர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து தலைகவசத்தின் முக்கித்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடம் விளக்கும்படி நூதனமுறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்
