

மதுரை மேலூர் பகுதியில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் புரோக்கர் கைது
மேலூர்: சொத்து மதிப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய மேலுார் துணை தாசில்தார் மணிகண்டன் 44, புரோக்கர் மூக்கன் வயாது 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலூர், கருத்தபுளியம்பட்டி பிரபு வயது 40, இவரது மனைவி மாலதியின் பெயரில் ரூ. 15 லட்சத்திற்கு சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
தலைமையிடத்து துணை தாசில்தார் மணிகண்டன் சான்றிதழ் வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசில் பிரபு புகார் செய்தார். அவர்கள் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பிரபுவிடம் கொடுத்தனர். நேற்று தாலுகா அலுவலகத்தில் மணிகண்டனிடம் பிரபு பணம் தருவதாக கூறினார்.
அவரை அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அங்கிருந்த சென்னகரம்பட்டி நடுப்பட்டி புரோக்கர் மூக்கனிடம் 48, பணத்தை வாங்கி வைத்து கொள்ளுமாறும் போகும் போது வாங்கி கொள்வதாகவும் மண்கண்டன் கூறி சென்றார். மூக்கனிடம் பிரபு தர மறுத்து அலுவலகத்தின் ஜன்னல் அருகே இருவரும் வந்தனர். அப்போது மூக்கனிடம் பணத்தை கொடுக்குமாறு மணிகண்டன் சைகை செய்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பிரபு இருவரையும் கைது செய்தனர்
