
ஆன் லைன் விற்பனை கமிஷன் ரூ. 4.18 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மோகன கண்ணன் வயது 32/22, பி.இ., பட்டதாரியான இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனாத்தில் பணி புரிந்தார்
கொரோனாவால் 2021லிருந்து வீட்டிலிருந்து பணிபுரிந்தார் அப்போது 7030901663 என்ற எண்ணிலிருந்து வீட்டிலிருந்து ரூ. 8000 முதல் 20,000/- வரை சம்பாதிக்கலாம் என எஸ்.எம்.எஸ். வந்தது. இதனை நம்பி பொருட்களை வாங்கி ரூ 250 முதல் 2500 வரை லாபம் பெற்றார் கூடுதல் கமிஷன் பெற அதிக பொருட்களை வாங்க வேண்டுமென்றும் 7 இலக்குகளை முடிக்க கூறி எஸ்.எம்.எஸ். வந்தது.
இதனை நம்பி பொருட்களை வாங்குவதற்காக சிறிது சிறிதாக ரூ 4 லட்சத்து 18 ஆயிரத்து 280 வரை செலுத்தினார் அதன் பிறகு லாபமாக வந்த கமிஷன் தொகையை கூட எடுக்க முடியவில்லை இது தொடர்பாக மோகனகண்ணன் புகாரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் விசாரணை நடத்தி வருகிறார்
