
மதுரையில் பல்வேறு பகுதிகளில் திருடு போன 121 செல்போன்கள் மீட்பு
மதுரையில் பல்வேறு பகுதிகளில் திருடு போன 121 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவைகனை
உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.82.10 லட்சம் மதிப்பு உடைய மொத்தம் 821 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
