
மின் திருட்டு கண்டுபிடிப்பு, ரூபாய் 9.78 லட்சம் அபராதம்
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மதுரை அமலாக்க கோட்ட அதிகாரிகள், திண்டுக்கல், தேனி மின் பகிர்மான வட்டத்திற்குட்ட்ட திண்டுக்கல் மார்க்கம்பட்டி மயிலாடும்பாறை ஏனங்கனூர் ரெட்டியார்பட்டி கன்னிவாடி வளையத்துப்பட்டி பழனி தாழி நரிக்கல்பட்டி ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டனர். 11 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு மின் நுகர்வோருக்கு ரூ. 9.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்பு கொண்டனர். குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரச தொகை ரூ. 65 ஆயிரம் செலுத்தினர்.
மின் திருட்டு குறித்து 94430 37508 ல் தகவல் தெரிவிக்கலாம் என மதுரை செயற் பொறியாளர் ( அமலாக்கம்) பிராபாகரன் தெரிவித்தார்.
