
பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை வழக்கில் கூலி படையினர் அதிரடி கைது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அல்லி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19ஆம் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இது குறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மருமகனை மாமியார் கூலிப்படையை வைத்து கொலை செய்தது ஒப்புக்கொண்டார். சகுந்தலாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.உடனடியாக பாலக்கோடு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கூலிப்படையினர் கைது செய்தனர். இதில் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 24 கிருஷ்ணகிரி மாவட்டம் தேவிரஅள்ளி சேர்ந்த ஜனார்த்தனன் 24 ஆகிய இதுவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
