
பாலியல் வழக்கில் பிரபல நகை அடகு கடை அதிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது .52), இவர் பாலக்கோடு பஜாரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரது கடையில் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியை சேர்ந்த தெய்வானை (வயது. 25) என்பவர் வேலை செய்து வந்தார், இவரிடம் பழனியப்பன் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், மறுத்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார், மேலும் நகைகளை திருடி சென்று விட்டாய் என கூறி போலீசில் புகார் தந்துவிடுவேன் என மிரட்டி தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார், ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அடைந்த தெய்வானை உடனடியாக பாலக்கோடு அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் கவிதா. சுப்ரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
